Friday 14 April 2017

ஹேவிளம்ப புத்தாண்டு - விண்ணியல் குறிப்பு


April 14, 2017 - சித்திரை 1, 2017 ஹேவிளம்ப வருடம் 

April 14, 2014 - சித்திரை 1, 2014 ஜய வருடம்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இன்று (ஏப்ரல் 14, 2017) சித்திரை மாதம் முதல் நாள் (இது சவன தினம் - solar day). மேலும் த்ரிதியை திதி (lunar day). மேலும் இன்று விசாக நட்சத்திரம் (stellar or sidereal day). பாரத பண்பாட்டில் மூன்றையும் அனுசரிப்பது பண்டைய வழக்கம். ஸ்டெல்லாரியம் மென்பொருளில் படம் எடுத்து இன்றைய இரவு விண்ணின் கோலத்தை காட்டியுள்ளேன். சித்திரை நட்சத்திரம் அருகே வியாழன் இருக்கும் (ஒரு மாசம் வாடகை கொடுத்துவிட்டார் அந்த பிரஹஸ்பதி, மெதுவாகவே அடுத்த வீட்டுக்கு செல்வார்).

2014-ல் தமிழ் புத்தாண்டு இன்று போல் த்ரிதியையில் வராமல், பௌர்ணமி அன்று வந்தது, அதாவது அன்றே சித்ரா பௌர்ணமி. இரண்டும் சேர்ந்து வருவது அபூர்வம் (ஆனால் அதிசயம் அல்ல - ஏறக்குறைய முப்பதாண்டுக்கு ஒரு முறை வரும்). ஆனால் அன்று செவ்வாய் கிரகமும் சந்திரனோடு உதித்து, அஸ்தமித்தது. அது இன்னும் கொஞ்சம் அபூர்வர்ம். 2017-ல் செவ்வாய் கிழக்கே இல்லாமல் மேற்கே காணலாம். விஜய் மால்யா, லலித் மோதி ஞாபகம் வந்தால் பழி ஐபிஎல்-லுக்கே.

சித்திரை நட்சத்திரம் அன்று சித்திரைக்கு அருகே இருந்த சந்திரன், இன்று விசாகம் அருகே இருப்பதால் இன்று விசாக நட்சத்திரம். கொஞ்சம் குழப்பமிருந்தால் திதி-நட்சத்திரம்-சவண நாள் வித்தியாசம் பற்றிய விளக்கத்திற்கு,  இந்த வலைப்பூவை படிக்கவும்.

எச்சரிக்கை - முழுதாக குழம்ப வாய்ப்புண்டு.

இந்திய விண்ணியல் கட்டுரைகள்

2 comments:

  1. இதைவிட தெளிவாக சொல்ல உம்மைவிட்டால் ஆளில்லை.
    தயவுசெய்து என்ன புரிந்து என்று கேட்டுவிடாதீர் ஐயா.
    வானத்தை அண்ணாந்து பார்த்து அனுபவிக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திடீர்...
    அதே பெரிய விஷயம்

    ReplyDelete