Sunday 22 January 2017

கம்சிலோவின் உயிரின கணக்கு

Fascinating graph of Life on Earth - this blog in English 

கடல்வாழ் உயிரினமும் நிலவாழ் உயிரினமும் பல விதம் வேறுபட்டவை. உருவத்தில் மட்டுமல்ல, எடையிலும் அவை பிரம்மாண்டமாக வேறுபட்டவை! எடையா?
தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேற்றுமையும் நாம் யாவரும் அறிந்ததே. இந்த ஒப்பீட்டிலும், எடை வேற்றுமை வியப்பானது!

ஒட்டுமொத்த உயிரினங்களின் எடையை எப்படி அளக்கமுடியும்? கருத்து கணிப்பு போல் இதுவும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் விவரம். சராசரியாக ஒரு சதுர மீட்டரில், ஒரு சதுர கிலோமீட்டரில் எத்தனை உயிரினங்கள் உள்ளன, அவற்றின் தனிப்பட்ட எடை என்ன, இதனால் ஒரு சதுர கி.மி.யில் அவற்றின் எடை என்ன, இந்தந்த பிரதேசத்தில், நாட்டில், நிலப்பரப்பில், நீர்பரப்பில் என்று கணித்து வகுக்கும் அளவுகள்.

“உயிர்மண்டலத்தின் பரிணாம வளர்ச்சி” (Evolution of the Biosphere), என்னும் நூலை எம்.எம்.கம்சிலோவ் (MM Kamshilov) ருஷிய மொழியில் எழுதி, ஆங்கிலத்தில் மின்னா ப்ரோட்ஸ்கயா (Minna Brodskaya) மொழிபெயர்த்ததை, சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. மீர் அச்சகம், மாஸ்கோ, 1972 வெளியீடு. டைனாசர் காலம் சென்று பாலுண்ணி காலம் தோன்றி, மனித இனம் பூமியை ஆண்டுவருவது நம் கர்வம் கொண்ட கற்பனை. உயிரினம் மலையெனில் மனித இனம் அதில் ஒரு மடு. ஏன் விலங்கினமே மடு தான்.

உண்மையில், மரங்களே பூமியின் மிகப்பரவலான உயிரினம். பூமியில் முக்கால் பரப்பு கடலும் கால் பரப்பு நிலமும் இருப்பதால், உயிரினங்களும் அதே விகிதாச்சாரத்தில் இருக்கலாம் என்பதே நமக்கு இயல்பாக தோன்றும். இனங்களின் எண்ணிக்கையில் (வகைகளில்) தாவரங்களை விட விலங்குகளே அதிகம். ஜே.பி.எஸ்.ஹால்டேன் என்ற உயிரியில் வல்லுனர் தீவீர நாத்திகவாதி. அவரிடம் ஒரு நிருபர், “கடவுள் இருந்தால் அவரை நீங்கள் எப்படி வர்ணிப்பீர்கள்?” என்று வினவ, “கடவுள் இருந்தால் அவர் அளவற்ற வண்டு பிரியர்,” என்றார் ஹால்டேன். நாற்பதாயிரம் வண்டினங்கள் உள்ளன. மற்ற எல்லா இனங்களை விட, இனவகையில் மிக்க வாழ்வது வண்டு இனமே. .

இதோ கம்சிலோவின் கணக்கு!

நிலம்வாழ் உயிரினம்
எடை
தாவர இனம்
விலங்கினமும் நுண்ணுயிரும்
டன் * 10^12
2.4
0.02
விகிதாச்சாரம்
99.2
0.8

கடல்வாழ் உயிரினம்

எடை
தாவர இனம்
விலங்கினமும் நுண்ணுயிரும்
டன் * 10^12
0.0002
0.003
விகிதாச்சாரம்
6.3
93.7

எண்ணிக்கையில் விலங்கினமும் நுண்ணுயிரும் அதிகமாக இருப்பினும், பெரும் மரங்கள் உயிரினத்தில் தொண்ணூறு சதவிகிதம் என்பது, வியப்பை அல்ல, எனக்கு பிரமிப்பை ஊட்டுகிறது.

No comments:

Post a Comment